மஹிந்தவின் முன்னாள் சாரதி உள்ளிட்ட இருவர் விளக்கமறியலில்

242 0
அரச வளங்களை துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சாரதி உள்ளிட்ட இருவர், தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, திஸ்ஸ விமலசேன மற்றும் லால் சிறிசேன ஆகிய குறித்த இருவரையும் எதிர்வரும் 18ம் திகதி வரை, விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்கு சொந்தமான இடமொன்றில் சட்டவிரோதமான முறையில் கல்குவாரி ஒன்றை நடத்திச் சென்றதற்கு அமைய, இரண்டு கோடியே தொன்னூறு இலட்சம் ரூபாவுக்கும் அதிக நஸ்டத்தை ஏற்படுத்தியதாக குற்றம்சுமத்தப்பட்டு இவர்கள் அண்மையில் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, சந்தேகநபர்களது பிணை கோரிக்கையை ஆராய்ந்த கொழும்பு மேலதிக நீதவான் சானிமா விஜேபண்டார, அதற்கு போதுமானளவு காரணங்கள் முன்வைக்கப்படவில்லை என, தெரிவித்துள்ளார்.

இதுஇவ்வாறு இருக்க, இந்த வழக்கின் இரண்டாவது சந்தேகநபரான லால் சிறிசேன என்பவர் நீதிபதியிடம் இரகசிய வாக்குமூலம் அளிக்க தயாராகவுள்ளதாக, அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சுட்டிக்காட்டிள்ளார்.

 

Leave a comment