அகலவத்தை மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவித்தல்..

236 0

நிலவும் சீரற்ற காலநிலையுடன் அகலவத்தை பிரதேசத்தில் மலைப் பகுதிகளில் இருப்பவர்கள் தொடர்ந்தும் மண்சரிவு தொடர்பில் அவதானமாக இருக்குமாறு தேசிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கோரியுள்ளது.

நேற்றைய தினம் அகலவத்தை பிரதேசத்தில் 100 மில்லி மீட்டர் வரை கடும் மழை பெய்துள்ளதாக அந்த நிலையத்தின் உதவி இயக்குனர் பிரதீப் கொடிபிலி தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமையுடன் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனமும் அந்த பிரதேசத்திற்கு மண் சரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனுடன் குக்குலே கங்கையின் வான் கதவுகள் தொடர்ந்து திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதனுடன் மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்றைய தினம் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

தென் மாகாணம் மற்றும் பிபில பிரதேசத்தில் இடைக்கிடையில் மணிக்கு 50 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

இதேவேளை, பியகம – பன்னிபிட்டிய வரையான மின்சார கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறால் நேற்று இரவு பல பிரதேசங்களில் ஏற்பட்டிருந்த மின் விநியோகத் தடை தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment