கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் அலுவலகத்தை மறித்து சங்கம் கவனயீர்ப்பு

296 0

பேரிணைய நலத்திட்ட நிதியை வழங்கக்கோரி  கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திச் கூட்டுறவுச் சங்கத்தின் பணியாளர்கள் அங்கத்தவர்கள்  தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இன்று திங்கள் கிழமை  காலை கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் அலுவலகத்தை மறித்து தங்களின் கோரிக்கை நிறைவேறும் வரை இந்தக் கவனயீர்ப்பு  போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கூட்டுறவுக்குள் அரசியல் வேண்டாம், கூட்டுறவுத் திணைக்களம் அரசியல் பின்னணியில் செயற்படுகிறதா?, கூட்டுறவுத் திணைக்களமே எம்மை வதைக்காதே, மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளரை மாற்றும், கூட்டுறவுத் திணைக்களமே நீ இரட்டை வேடமா? அடிக்காதே அடிக்காதே அங்கத்தவர்கள் வயிற்றில் அடிக்காதே, பேரிணையமே நலத்திட்ட நிதியை எமக்குத் தா, ஒழிக ஒழிக பேரிணையமே ஒழிக போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகள் ஏந்தியிருந்தோடு, கோசங்களையும் எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

வடமாகாண பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் பேரிணையத்தில் உள்ள கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்திற்கு வரவேண்டிய நிதியினை பேரிணையம் வழங்க வேண்டும்  என்பதோடு, பேரிணையத்தில் இருந்து தங்களின் அங்கத்துவத்தை நீக்குமாறும்  மேலும் கோரிக்கை விடுத்திருந்தனர், வட மாகாண பனை தன்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கங்களின் பேரிணையத்தில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் வவுனியா மாவட்டங்களைச் சேர்ந்த பத்தொன்பது சங்கங ;களும் 12 ஆயிரத்திற்கு மேற்பட்ட அங்கத்தவர்களும் காணப்படுகின்றனர் இதில் கிளிநொச்சி பனை  தென்னைவள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கமும் ஒன்று. என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் சம்பவ இடத்திற்கு வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினர் சி . சிறிதரன்  கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திச் கூட்டுறவுச் சங்கத்தின் பணியாளர்கள் அங்கத்தவர்களுடன்  கலந்துரையாடியதுடன்  குறித்த பிரச்சனைக்கு தீர்வு காணும் பொருட்டு கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் உடனும் கலந்துரையாடிய வாறு உள்ளார் என அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

Leave a comment