அரசமைப்புக்கு இரு பிரிவின் அனுமதி – கயந்த கருணாதிலக்க

321 0

புதிய அரசமைப்புக்கு, வண.மஹாநாயக்க தேரரினதும் மக்களதும் அனுமதி தேவை என்று, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான கயந்த கருணாதிலக்க, நேற்று (09) தெரிவித்தார்.

புதிய அரசமைப்பைப் பொறுத்தவரை, அரசாங்கம் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்போகின்றது என்பது தொடர்பாக, அவர் உரையாற்றும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“பல்வேறு அரசியல் கட்சிகள், அரசியல் ஆதாயம் தேடுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. எவ்வாறாயினும், புதிய அரசமைப்புகான இறுதி நாளன்று, மஹாநாயக்க தேரர் மற்றும் மக்களிடம் அனுமதி கோரப்படும்” என்று அவர் கூறினார்.

“அரசமைப்பின் மூலம், பௌத்த மதத்துக்குக்  கொடுக்கப்பட்ட உறுதி, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மீளப் பெற்றுக்கொள்ளப்பட மாட்டாது” என்றும் அவர் இதன்போது உறுதியளித்தார்.

இந்த புதிய அரசமைப்புக் குறித்து விளக்கமளிப்பதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், கூட்டாக வண. மஹாநாயக்க தேரரை, வெகு விரைவில் சந்திப்பர் என்றும் அவர் கூறினார்.

Leave a comment