சைக்கிளை உருட்டிச் சென்ற வயோதிபர் வாகனம் மோதியதில் பலி

12295 59

மட்டக்களப்பு கொழும்பு நெடுஞ்சாலையில் ஓட்டமாவடி, தியாவட்டவான் பிரதேசத்தில் ஞாயிறன்று இடம்பெற்ற வீதி விபத்தில் வயோதிபர் ஒருவர் மரணமடைந்திருப்பதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனையைச் சேர்ந்த முஹம்மது அஸனார் முஹம்மது அபூபக்கர் (வயது 86) என்பவரே இந்த விபத்தில் பலியாகியுள்ளார்.

இவர் தனது துவிச்சக்கர வண்டியை வீதியருகே சைக்கிளை உருட்டிச் சென்றுகொண்டிருந்தபோது திடீரென அதிவேகமாக வந்து கொண்டிருந்த சிறிய ரக வாகனமொன்று மோதியுள்ளது.

படுகாயங்களுக்குள்ளான வயோதிபர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும் சற்று நேரத்தில் அவர்p சிகிச்சை பயனின்றி மரணித்துள்ளார்.

இச்சம்பவத்தையடுத்து ஸ்தலத்திறிகு விரைந்த போக்குவரத்துப் பொலிஸார் வயோதிபரை மோதிய வாகன சாரதியைக் கைது செய்ததோடு மேலதிக விசாரணைகளையும் நடத்தி வருகின்றனர்.

 

Leave a comment