அரசாங்கம் ஏற்றுக்கொண்ட கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில் தாம் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ள தொழிற்சங்க போராட்டத்தை மீண்டும் மேற்கொள்ளப் போவதாக கனியவளத்துறை தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.
ஒன்றியத்தின் இணைப்பாளர் டி.ஜே.ராஜகருணா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
திருகோணமலையில் உள்ள கனியவள தாங்கி கட்டிடத் தொகுதியை இந்திய நிறுவனத்திற்கு கையளிப்பதை தடுப்பது உள்ளிட்ட கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து இந்த தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

