இந்தியாவில் வெளியாகும் மேக்புக், ஐமேக் மற்றும் ஐமேக் ப்ரோ

226 0

அப்பிள் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த புதிய மேக்புக், ஐமேக் மற்றும் ஐமேக் ப்ரோ சாதனங்கள் விரைவில் இந்திய சந்தைகளில் விற்பனைக்கு வரும் என ஆப்பிள் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் சர்வதேச டெவலப்பர்கள் மாநாடு கடந்த மாதம் அமெரிக்காவில் நடைபெற்றது. மேக்புக், ஐமேக் மற்றும் ஐமேக் ப்ரோ சாதனங்களுடன் ஆப்பிளின் புதிய இயங்குதளத்தின் பீட்டா பதிப்புகள் இந்த மாநாட்டில் ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டது.
இந்நிலையில், புதிய மேக்புக், ஐமேக் மற்றும் ஐமேக் ப்ரோ சாதனங்கள் இந்தியாவில் ஜூலை 10-ந்தேதி முதல் விற்பனைக்கு வரும் என ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்திய சந்தையில் விலை மாற்றம் செய்யப்படவில்லை. 1.8 ஜிகாஹெர்ட்ஸ் கோர் ஐ5 பிராட்வெல் சிப்செட் கொண்டுள்ள மேக்புக் ஏர் 128 ஜிபி மாடல் ரூ.80,900 விலையிலும், 256 ஜிபி எஸ்.எஸ்.டி. ஸ்டோரேஜ் கொண்ட மாடல் ரூ.96,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் 13-இன்ச் மேக்புக் ப்ரோ விலை ரூ.1,09,900 முதல் துவங்குகிறது, இதன் முந்தைய மாடலின் விலை ரூ.1,29,900 என நிர்ணயம் செய்யப்பட்டது. எனினும் தற்சமயம் இதன் ஸ்டோரேஜ் 128 ஜிபி மட்டுமே வழங்கப்படுகிறது.
256 ஜிபி மேக்புக் ப்ரோ மாடல் ரூ.1,26,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் 13-இன்ச் மேக்புக் ப்ரோ டச்பார் ரூ.1,000 குறைவாக நிர்யணிக்கப்பட்டுள்ளது. இதனால் 256 ஜிபி மாடல் ரூ.1,54,900 மற்றும் 512 ஜிபி எஸ்.எஸ்.டி. ஸ்டோரேஜ் ரூ.1,71,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஒற்றை யு.எஸ்.பி. டைப்-சி போர்ட் மற்றும் 256 ஜிபி எஸ்.எஸ்.டி. கொண்ட 12 இன்ச் மேக்புக் தற்சமயம் ரூ.1,09,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய மேக்புக் சாதனத்தில் கேபி லேக் பிராசஸர்கள், 50 சதவிகித வேகம் கொண்ட எஸ்.எஸ்.டி. மற்றும் கடந்த ஆண்டு வழங்கப்பட்ட கீபோர்டுகளுடன் வழங்கப்படும்.
புதிய 10.5 இன்ச் ஐபேட் ப்ரோ 64 ஜிபி வைபை மாடல் விலை ரூ.52,900 முதல் துவங்குகிறது. 256 ஜிபி மாடல் ரூ.60,900 மற்றும் 512 ஜிபி மாடல் ரூ.76,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மூன்று யு.எஸ்.பி. 3 போர்ட் கொண்டுள்ள மேக் மினி ரூ.40,990 முதல் துவங்குகிறது.

Leave a comment