கீதாவின் வழக்கில் பிரதிவாதியாவதற்கு பியசேனவுக்கு அனுமதி

15602 0

கீதா குமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்து செய்வது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் பிரதிவாதியாவதற்கு முன்னாள் அமைச்சர் பியசேன கமகேவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

பியசேன கமகே தாக்கல் செய்துள்ள மனுவை ஆராய்ந்து பார்த்ததில் பிரதம நீதியரசர் பிரிசாத் டெப் தலைமையிலான மூவர் கொண்ட நீதியரசர் குழாம் இந்த அனுமதியை வழங்கியதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.

கீதா குமாரசிங்க இரட்டை குடியுரிமையை பெற்றிருப்பதன் காரணமாக பாராளுமன்ற உறுப்புரிமையை வகிக்க முடியாது என அண்மையில் மேன் முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அந்த தீர்ப்புக்கு சவால் விடுக்கும் வகையில் கீத்தா குமாரசிங்கவினால் உயர்நீதிமன்றத்தில் விசேட மேன்முறையீடு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கீத்தா குமாரசிங்கவின் உறுப்பினர் பதவி ரத்து செய்யப்படுமிடத்து வெற்றிடமாகும் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தாமே நியமிக்கப்பட வேண்டும் என்பதன் காரணமாக உயர் நீதிமன்றத்தில் பியசேன கமகே பிரதிவாதியாக முன்னிலையாவதற்கு அனுமதி கோரியிருந்தார்.

Leave a comment