சச்சினின் சாதனையை முறியத்தார் விராட் கோலி

339 0

இந்தியாவின் முன்னாள் கிரிக்கட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மற்றுமொரு சாதனையை இந்திய கிரிக்கட் அணியின் தலைவர் விராட் கோலி முறியடித்துள்ளார்.

ஒரு அணி வெற்றி இலக்கை நோக்கி எதிர்த்தாடும் போது, அதிக சதங்களைப் பெற்றவர் என்ற சாதனையை 17 சதங்களைப் பெற்றதன் மூலம் சச்சின் டெண்டுல்கர் தக்க வைத்திருந்தார்.

இந்த சாதனையை விராட் கோலி இவ்வாறு எதிர்த்தாடி 18 சதங்களைப் பெற்று முறியடித்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் தமது 28வது ஒருநாள் சதத்தை பெற்றதன் மூலம் கோலி இந்த சாதனையைப் படைத்துள்ளார்.

Leave a comment