வடமாகாணசபையில் இடம்பெறும் குழப்பங்களின் பின்னணியை கண்டறிய விசாரணை நடத்த வேண்டும்

394 0

தமிழர்களடங்கிய வடமாகாண சபை உறுப்பினர்களிடையே அதிகூடிய வாக்குகளைப் பெற்ற வேட்பாளரான முதலமைச்சர் விக்னேஸ்வரனை வெளியேற்ற அண்மையில் ஒரு சூழ்ச்சித்திட்டம் இடம்பெற்றுள்ளது. இவர் இலங்கைத் தமிழரசுக் கட்சி (ITAK), ஈழ மக்கள் சனனாயகக் கட்சி(EPRLF) மற்றும் தமிழீழ விடுதலை இயக்கம் (TELO), PLOTE ஆகிய நான்கு கட்சிகளால் தெரிவு செய்யப்பட்டவர். இப்போது இலங்கைத் தமிழரசுக் கட்சியானது, முதலமைச்சர் விக்னேஸ்வரனை வெளியேற்றுவதற்காக சிங்கள, முஸ்லிம் மற்றும் இலங்கையின் துணை இராணுவக் கட்சி ஆகியவற்றுடன் சேர்ந்துள்ளது.

முதலமைச்சரை அகற்றுவதற்கு முயற்சி செய்ய முன்னதாக ITAK ஆனது ஏனைய மூன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் (TNA) பங்காளிக் கட்சிகளுடன் கலந்துரையாடியிருக்க வேண்டும். தமிழர் எதிர்ப்புக் குழுக்களுடன் சேர்ந்து 99 வீதத் தமிழர்களால் விரும்பப்படும் தமிழர் தலைவரான முதலமைச்சர் விக்னேஸ்வரனை அகற்றுவதற்காக ITAK சிங்கள ஆளுநரிடம் சென்றனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் திரு. சம்பந்தனால் இந்த TNA கட்சியினை வழி நடாத்த முடியவில்லை என்பதும் வடமாகாண சபை உறுப்பினர்கள் தமக்கென சொந்தமாக கூட்டமைப்பினை உருவாக்கவும் அனுமதித்ததோடு தமிழர்களையும் கோபமடையவைத்துள்ளார். திரு.சம்பந்தன் தனது கட்சியின் கட்டுப்பாட்டை இழந்துவிட்டாரென்பதையே இது மேலும் வெளிக்காட்டுகின்றது. ஆகையால் அவர் தனது பதவி விலகல் பற்றிச் சிந்திக்கவேண்டும்.

என்ன நடந்து கொண்டிருக்கின்றதென்பதையும் இந்தச் சூழ்ச்சிக்குப் பின்னால் யார் இருக்கின்றார்களென்பதையும் கண்டுபிடிப்பதற்கான சிறந்த வழியாக ஒரு முழுமையான விசாரணை ஒன்றைச் செய்யவேண்டுமென்பதையே ஐக்கிய அமெரிக்கத் தமிழர்களாகிய நாம் கூறுகின்றோம். வடமாகாணசபையின் குழப்பங்களுக்குப் பின்னாலிருப்பது, ரணில் வி;க்கிரமசிங்கவா, சரத்பொன்சேகாவா, மைத்திரிசிறிசேனவா அல்லது இலங்கை அரசாங்கமா? தமிழர்கள் இதனை அறியவேண்டிய தேவையுள்ளது. எம்மிடையேயுள்ள துரோகமிழைக்கும் தமிழர்களை அடையாளங்காண்பதற்கான ஒரேயொரு வழி இது தான். நாங்கள் மோசமான தமிழர்களை அடையாளங்காண வேண்டியுள்ளது; இல்லாவிடில், துரோகமிழைத்த கருணாவால் திரு.பிரபாகரன் அனுபவித்தவற்றைப் போன்ற பின்விளைவுகளைத்தான் தமிழர்களும் எதிர்கொள்ளவேண்டிவரும்.

அமெரிக்கத் தமிழர்களாகிய நாங்கள், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வடமாகாண சபை உறுப்பினர்களால் உருவாக்கப்பட்ட இந்தக் குழப்பங்களை விசாரணை செய்யும்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தோழமைக் கட்சிகளையே வேண்டிக் கேட்கின்றோம். எந்தவொரு கட்சிகளும் விசாரணை செய்யமறுத்தாற் கூட, ஏனைய தோழமைக் கட்சிகள் இதனை ஆரம்பிக்கவேண்டும். விசாரணைசெய்யும் குழுவானது உள்ளூரிலுள்ளவர்களைக் கொண்டே உருவாக்கப்பட வேண்டும்.

அரசியலிலில்லாதவர்களையும் இதையொத்த விசாரணைகளை ஏற்கனவே நடாத்தியுமுள்ள நிபுணர்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தோழமைக் கட்சிகள் பயன்படுத்தவேண்டும். இவ்வாறான ஒத்ததிறமைகளைக் கொண்ட யாழ் உயர்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் இந்தவிசாரணைக் குழுவிற்குத் தலைமை தாங்க சரியான நபராக இருப்பாரென்றே நாம் கூறுகின்றோம். TNA ஆனது இன்னும் நான்கு அல்லது இரண்டு விசாரணையாளர்களைச் சேர்க்கவேண்டும். அப்போதுதான் எந்தவொரு இறுதித் தீர்மானத்தையும் நிச்சயமாகவும் தொங்கு நிலையில் இல்லாமலும் எடுக்கக்கூடியதாக இருக்கும்.

பின்வரும் விடயங்கள் விசாரணைசெய்யப்படவேண்டும்:

1. வடமாகாண சபை உறுப்பினர்கள் ஆர்னோல்ட், அஸ்வின் மற்றும் சயந்தன் ஆகியோர் இவ்வருடம் ஜனவரியிலிருந்து முதலமைச்சரை அகற்றுவதற்கான சூழ்ச்சித்திட்டமொன்றில் ஈடுபட்டுவந்துள்ளதாக தமிழ் ஊடகங்களிற்கு வடமாகாண சபை உறுப்பினர் திரு.விந்தன் கனகரட்ணம் தெரிவித்துள்ளார். இம்மூவரின் பின்னணியில் யார் உள்ளனர் என்பதை விசாரணை மூலம் கண்டறிய வேண்டும்.

2. சிவஞானம், ஆர்னோல்ட், அஸ்வின் மற்றும் சயந்தன் ஆகியோர் முதலமைச்சரை அகற்றுவதற்காக சிங்களவர்கள், முஸ்லிம்கள் மற்றும் இலங்கையின் துணை-இராணுவக் குழுவிடமிருந்து கையெழுத்துக்களைப் பெற்றபோது ஏன் தமிழர்-எதிர்ப்பு உறுப்பினர்கள் போலச் செயற்பட்டனர்?

3. இந்த குழப்பத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் திரு.சுமந்திரனும் பாராளுமன்ற உறுப்பினர் திரு.சேனாதிராசாவினதும் பங்கு என்ன?

4. திரு.சுமந்திரன் தமிழர்களிடையே ஏன் பிரிவினையை ஏற்படுத்த முனைந்தார்?

அ. முதலமைச்சரை அகற்றுவதற்கான சூழ்ச்சி ஒன்று சுமந்திரனால் தான் ஆரம்பித்துவைக்கப்பட்டதென பெரும்பாலான தமிழர்கள் நம்புகின்றனர். வடமாகாண சபை உறுப்பினர்களிடையே பிரிவினையைக் கொண்டுவருவதற்கு சுமந்திரன் விரும்பினார்.

ஆ. இவர் புலம்பெயர் தமிழர்களிடையேயும் பிரிவினையை உருவாக்கினார். USTPAC, GTF, CTC மற்றும் ATF போன்ற புலம்பெயர் தமிழர் அமைப்புகள் சர்வதேச விசாரணையினையும் தமிழரின் தனியாட்சியையும் கோருவதற்காகவே செயற்பட்டன. இவை சுமந்திரனால் இலங்கை அரசாங்கம் சார்பான அமைப்புக்களாக மாற்றப்பட்டன. சுமந்திரனின் தலையீட்டின் பின்னர் புலம்பெயர் தமிழர்களிடையே 90வீத ஆதரவினையும் இவ்வமைப்புகள் இழந்தன.

இப்போது இந்தக் குழுக்கள் சுமந்திரனும் மங்கள சமரவீரவும் எதைக் கூறுகின்றார்களோ அதற்கே ஆதரவளிக்கின்றனர். அவர்கள் கடந்த வருடம் ஐ.நா.மனித உரிமைகள் சபைத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கென கொழும்பிற்காக இரண்டு வருடங்களை நீட்டிப்புச் செய்யும்படி கேட்பதற்காகவோ வாஸிங்டன் டி.சி.க்குச் சென்றனர். இவர்களது பயணத்திற்கான செலவுகள் அனைத்தும் அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் திரு. காரியவசத்தினால் வழங்கப்பட்டிருந்தன. இந்த ஐந்து இலங்கை அரசசார்பான புலம்பெயர் குழுக்களையும் புலம்பெயர் தமிழர்கள் தற்போது ‘சிங்கள அடிவருடிகள்’ என அழைக்கின்றனர்.

இ. பங்காளிக் கட்சிகளில் சிலர் ஆயுதந்தரித்த குழுக்களாகவும் மற்றவர்கள் ஆயுதமற்ற குழுக்களாகவும் பிரித்து ஆயுதம் தரித்த குழுக்களை கீழத்தரமான கட்சிகளாக பொதுவெளியில் கூறி பங்காளிக்கட்சிகளிடையே வேற்றுமையை சுமந்திரன் உருவாக்கினார்;.

ஈ. திரு.சுமந்திரனும் அவரது மனைவியும் உடுவில் மகளிர் கல்லூரியிலும் குழப்பங்களை உண்டு பண்ணியிருந்தனர். அப் பாடசாலை அதிபரை நீக்குவதற்கான அவரது மறைமுகச் செயற்பாட்டினால் மாணவர்கள் கல்வியின்றித் தவித்ததோடு அதியுயர் திறமைமிக்க தலைமையாசிரியராக நீண்டகாலமாக இருந்து வந்த அதிபரையும் இழந்து தவிக்கவைத்தது.

உ. காணாமற்போனவர்களின் பெற்றோர்களிடையே குழப்பங்களை உண்டு பண்ணவும் சுமந்திரன் விரும்பினார். இந்தப் பெற்றோர்கள் பிரதம மந்திரி அலுவலகத்தில் இலங்கை அரச அதிகாரிகளுடன் ஒன்றுகூடலில் ஈடுபட்டிருந்தபோது அங்கு இருந்த சுமந்திரனை அங்கிருந்து வெளியேற்றுமாறு அவ்வதிகாரிகளிடம் கேட்டிருந்தார்கள்.

5. சுமந்திரன் ஜெனீவாவிற்குத் தனியாக ஏன் பயணித்தார்?

அ. சுமந்திரன் ஒருபோதுமே தமிழர்களுக்காக எதனையும் கதைக்கவில்லை. பதிலாக எப்போதுமே இலங்கைஅரசாங்கத்தின் நிகழ்ச்சித்திட்டத்திற்கு ஆதரவளிப்பதற்கே ஒப்புக்கொண்டிருந்தார்.

ஆ. ஐ.நா.விற்கான அமெரிக்கத் தூதர் சமந்தாபவர், மங்கள சமரவீர ஆகியோர் முன்னிலையில் நியூயோர்க்கில் வைத்து சுமந்திரன், வடக்கு-கிழக்கில் இலங்கை இராணுவத்தை வைத்திருப்பதற்கும் தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் இலங்கை இராணுவத்தைத் தக்கவைப்பதற்கும் ஒப்புப்கொண்டிருந்தார்.

6. சனாதிபதித் தேர்தலின் போது மாவைக்கு யார் இலட்சக்கணக்கான ரூபாய்களைக் கொடுத்தது? அது சுமந்திரனா? திரு.மாவைசேனாதிராசா TNA பாராளுமன்ற உறுப்பினர்களுக்குப் பணத்தை வழங்கினார். அவர் எங்கிருந்து அப்பணத்தைப் பெற்றார்? சுமந்திரனா அதனை அவரிடம் கொடுத்தது? அப்படியாயின், சுமந்திரனுக்கு யார் கொடுத்தார்கள்? சுமந்திரன் தமிழர்களின் இலட்சியத்தைப் பணத்திற்காக விட்டுக்கொடுத்தாரா? இது விசாரணை செய்யப்படவேண்டும்.

7. சுமந்திரன் பணத்தை கனடா மற்றும் பிரித்தானியாவிலிருந்து பெற்றிருந்தார். அவர் அது பற்றி TNA இடம் அறிக்கையளிக்க வேண்டுமென்பதுடன் அந்தக் கணக்குகளை TNA இடம் காட்டவும் வேண்டும். அவர் ஊழல் செய்திருக்கலாம். அவரது ஊழல்களை விசாரிப்பதே சிறந்தது. தமிழர்கள் சார்பாக வேலை செய்வதற்கென ஊழல் அற்றதொரு அரசியல்வாதியே தமிழர்களுக்குத் தேவைப்படுகின்றாரென்பதே முக்கியமாகும். எவருமே துன்பப்படும் தமிழர்களை அனுகூலமாகக் கொண்டு செயற்படக்கூடாது. இது பற்றி விசாரணை செய்யப்படவேண்டும்.

8. வடக்கு-கிழக்கு ஒன்றிணைப்பை ஏன் சுமந்திரன் கேட்கவில்லை? அவர் அஸ்வினிடமும், வாக்குகள் எண்ணுவதைக் கண்காணிப்பதற்காக யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்து அங்கு தங்கியிருந்த உதவித் தேர்தல் ஆணையாளராக இருந்த திரு.மொகமட்டிடமும் ஒப்பந்தமொன்றைச் செய்துள்ளாரா? தேர்தலில் சுமந்திரனை வெல்லவைப்பதற்காக திரு.மொகமட் வாக்குக் கணக்கெடுப்பில் மாற்றங்களைச் செய்திருந்ததாகச் சில ஊடகங்கள் அறிக்கை வெளியிட்டன. ஆகைவே,சுமந்திரன் தனது வெற்றிக்குப் பதிலாக வடக்கு-கிழக்கு ஒன்றிணைப்பினை விட்டுக்கொடுத்துள்ளார். இதன்மூலம் தமிழர்களுக்குப் பதிலாக கிழக்கு மாகாணத்தினை அஸ்வினதும் மொகமட்டினதும் நண்பர்களின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கக்கூடிய நிலையை ஏற்படுத்தியதா?. இதுவும் விளக்கமாக ஆராயப்பட வேண்டும்.

9. தமிழ் அரசியல் தீர்விற்காக கூட்டாட்சி ஒழுங்குகளை ஏன் சுமந்திரன் கேட்கவில்லை?

10. தேர்தலின்போது, திரு.சுமந்திரன் தான் சொந்தமாக உருவாக்கிய தேர்தல் விஞ்ஞாபனத்தினூடாக ஏன் போலியான வாக்குறுதிகளைக் கொடுத்தார்?

11. ‘முள்ளிவாய்க்காலில் இடம்பெற்றது ஓர் இனப்படுகொலையல்ல’ என்கின்றார் சுமந்திரன். ஒரு சில சிங்களக் குண்டர்களால் இடம்பெற்ற தொரு கொலையே என்பதே இதன் கருத்தாகும். மேலும் அதுவொரு சர்வதேசக் குற்றமல்ல என்றும் ஆகையால், அது உள்ளூர் நீதிபதிகளாலேயே விசாரணை செய்யப்படவேண்டும் என்றும் அவர் கூறினார். கொசோவோ, பொஸ்னியா மற்றும் தெற்கு சூடானில் இடம்பெற்ற நிகழ்வுகளிலிருந்து பட்டறவினைப் பெற்ற ஒவ்வொரு நிபுணர்களும் தமிழர்களுக்கு இடம்பெற்றது இனப்படுகொலையே என்கின்றனர். திரு.சுமந்திரன் வேண்டுமென்றே உலகிடம் முள்ளிவாய்க்கால் படுகொலையானது ஒரு இனப்படுகொலையல்லவென்று ஏன் கூறிவருகின்றார் என்பது விசாரணை செய்யப்படவேண்டும்.

தற்போது எமது முதலமைச்சர் விக்னேஸ்வரன் அனைத்து ஊழல் செய்த அமைச்சர்களையும் பதவி நீக்குவதற்கான திடமான நடவடிக்கைகளை எடுத்துள்ளார். ஒவ்வொரு தமிழரும் அவரது நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்தார்கள். முதலமைச்சரின் நடவடிக்கைகள் எந்தவொரு அரசியல்வாதியையும் நேர்மையாகவே எதிர்காலத்தில் செயற்படவைக்கும்.

தற்போது, சூழ்ச்சியாளர்கள், துரோகமிழைப்பவர்கள், தமிழர் எதிர்ப்புக் குழுக்கள், ஊழல் மிக்க அரசியல்வாதிகள் மற்றும் எமது அரசியல் கலாச்சாரத்திலுள்ள ‘கருணா’ போன்றவர்களை இனங்கான பொது விசாரணையொன்றினைச் செய்யவேண்டிய தேவை எமக்குள்ளது.

ஆகையால், அமெரிக்கத் தமிழர்கள், அமெரிக்கத் தமிழ் பேரவை மற்றும்; ட்ரம்பிற்கான தமிழர் அமைப்பைச் சேர்ந்த நாங்கள், வடமாகாணத்தில் குழப்பங்களின் பின்னணியை ஆராயும் குழுவிடம் பிழையான செயற்பாடுகளைக் கண்டறிந்து அவற்றை நிறுத்துவதற்கான தீர்வுகளைக் கண்டறிவதற்காக அமெரிக்காவில் குற்றப்பின்னணியை கண்டறிவதற்கு பொதுவிசாரணை மேற்கொள்ளுவது போன்று ஒரு வெளிப்படையான பொது விசாரணையொன்றை ஆரம்பித்து நடாத்தும்படி கேட்டுக்கொள்கின்றோம்.

நன்றி
அமெரிக்க தமிழ் பேரவை
ட்ரம்பிற்கான தமிழர் அமைப்பு

Leave a comment