ஆளும் அரசாங்கம் இரட்டை வேடம் போடுகிறது – நாமல் குற்றச்சாட்டு

8883 201

தற்போதைய அரசாங்கம் இரண்டு முகங்களுடன் செயற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

திஸ்ஸமஹராம பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

அந்த அரசாங்கம் மனித உரிமை ஆணைக்குழுவுடனே ஒன்றிணைந்துள்ளது.

இந்த அரசாங்கத்திற்கு மகிந்த மாத்திரமே தெரிகின்றார்.

இன்று ஊடக சுதத்திரம் மீறப்படுகின்றது.

ஒருபுறம் தகவல் அறியும் உரிமை சட்ட மூலம் கொண்டுவரப்பட்டுள்ளது.

மறுபுறம் ஊடகங்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

இவ்வாறு அரசாங்கம் இரண்டு முகங்களுடன் செயற்படுகின்றது எனவும் நாமல் ராஜபக்ஸ குற்றம் சுமத்தினார்.

Leave a comment