டெங்கு தொற்றால் பதுளையில் மற்றுமொரு மரணம்

11132 318

டெங்கு நோய் காரணமாக பதுளை பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணொருவர் பலியானார்.

பதுளை – ஹிந்தகொட பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவரே பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக பதுளை பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இரண்டு மாணவர்கள் டெங்கு நோய் தொற்று காரணமாக பலியானர்.

காய்ச்சல் காரணமாக 160 பேர் பதுளை பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதி வரை டெங்கு நோய் காரணமாக 226 பேர் மரணித்துள்ளனர்.

அத்துடன் டெங்கு தொற்றால் 80 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a comment