சொந்த நிலத்தில் கால்பதிக்கும் வரை போராட்டம் தொடரும் – கேப்பாபுலவு மக்கள்

361 0

கேப்பாபுலவு மக்களின் தொடர் போராட்டம் இன்றுடன் 128 ஆவது நாளை எட்டியுள்ளது.138 குடும்பங்களுக்குசொந்தமான 482 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி குறித்த தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

தமது காணிகளிலுள்ள பொருளாதாரத்தை இராணுவத்தினர் அனுபவித்து வரும் அதேவேளை தாம் பொருளாதாரத்தை கொண்டு நடத்துவதில் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

தமது சொந்த நிலத்தில் கால் பதிக்கும் எண்ணத்தோடு மார்ச் மாதம் 1 ம் திகதி ஆரம்பித்த எமது  தொடர் போராட்டத்தை தீர்வு கிடைக்கும் வரை  தாம் முன்னெடுக்கப்போவதாக மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கடந்த 2008 ஆம் ஆண்டு யுத்தம் காரணமாக சொந்த நிலங்களை விட்டு வெளிறேிய மக்களை 2012 ஆம் ஆண்டு மீள்குடியேற்றத்திற்கென அழைத்து வந்தபோதும் அவர்கள் சொந்தநிலங்களில் மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை.

இந்த நிலையில் பூர்வீக நிலத்திற்கு செல்வதற்கான போராட்டத்தை மக்கள் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எமது காணிகள் முற்றுமுழுதாக விடுவிக்கப்படுமென தமிழ் தலைமைகள்  அறிவித்துள்ள நிலையில் இராணுவம் தமது காணிகளுக்குள் புதிய கட்டிடங்களை அமைப்பதற்கான மூலப்பொருட்களை கொண்டு சென்று வருகின்றது தமக்கு மிகவும் வேதனையளிப்பதாக மக்கள் தெரிவிக்கன்றனர் 

Leave a comment