தமிழிசைக்கும்   வடக்கு மாகாண முதலமைச்சருக்குமிடையில் சந்திப்பு

248 0
பாரதீய ஜனதாக் கட்சியின் தமிழ்நாடு கிளைத் தலைவர் தமிழிசை இலங்கைக்கான திடீர் பயணம் மேற்கொண்டு நேற்றைய தினம் இலங்கைக்கு வருகை தந்தார்.
இன்று யாழ் விஐயம் மேற்கொண்டுள்ள தமிழிசைக்கும்   வடக்கு மாகாண முதலமைச்சருக்குமிடையில் தற்போது சந்திப்பு இடம்பெற்றுவருகின்றது.
இந்திய பாரதீய ஜனதாக் கட்சியின் தமிழ் நாடு கிளைத் தலைவர் தமிழிசை ஓர் தனிப்பட்ட பயணமாக இலங்கை வந்துள்ளார். இவ்வாறு வருகை தந்துள்ள தமிழிசையை நட்பின் நிமித்தமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் நேற்று  சந்தித்திருந்தார்.
இதேவேளை கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை நேற்று இரவு சந்தித்து தற்போதைய நிலவரங்கள் தொடர்பில் கலந்துரையாடினதையடுத்து குடாநாட்டிற்கான பயணத்தை இன்று  ஆரம்பித்த தமிழிசை யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கு இன்று வருகை தந்துள்ள தமிழிசை  தற்போது வடக்கு மாகாண  முதலமைச்சர் மற்றும் வடக்கு அமைச்சர்களை தற்பொழுது தற்போது சந்திக்கிறார்.இரு நாட்கள் தங்கியிருக்கும் தமிழிசை  குடாநாட்டின் முக்கிய இடங்களைச் சென்று பார்வையிடுவார். எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a comment