திருகோணமலை விலாங்குளம் மற்றும் கண்ணியா காட்டுப் பகுதிக்குள் அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டதாக உப்புவெளி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மணல் ஏற்ற பயன்படுத்திய மூன்று உழவு இயந்திரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர்கள் அன்புவெளி-கண்ணியா பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்கள் இன்றைய தினம் திருகோணமலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

