காலம் முடிவடைந்த மாகாண சபைகளின் தேர்தலை நடத்தும் அதிகாரம் ஆணைக்குழுவுக்கு உள்ளது

29181 0

மாகாண சபை ஒன்றில் உத்தியோகபூர்வ காலம் முடிவடைந்ததன் பின்னர் புதிய தேர்தலை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு தேர்தல்கள் ஆ​ணைக்குழுவிற்கு அதிகாரம் இருப்பதாக கலாநிதி பிரதீபா மஹாநாமஹேவா கூறியுள்ளார்.

உத்தியோகபூர்வ காலம் முடிவடைந்த மாகாண சபையின் காலத்தை நீடிக்க வேண்டுமாயின் அரசியலமைப்பில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியலமைப்பின் 154/இ பிரிவின் படி மாகாண சபைகளின் உத்தியோகபூர்வ காலம் 05 ஆண்டுகள் என்பதுடன், அந்தக் காலத்தை தாண்டும் மாகாண சபைகள் கலைக்கப்பட்டதாக கருதப்படும்.

அதன்படி சப்ரகமுவ, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாண சபைகளின் உத்தியோகபூர்வ காலம் ஒக்டோபர் 01ம் திகதியுடன் நிறைவடைய உள்ளது.

இதேவேளை தேர்தல் பிற்போடப்படுவது சம்பந்தமாக சம்பந்தமப்பட்ட அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும் என்று பெபரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி கூறியுள்ளார்.

Leave a comment