புதிய இராணுவத்தளபதி மற்றும் புதிய பாதுகாப்புச் செயலாளர் நியமனம்

247 0

பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக கபில முதன்த வைத்யரத்ன நியமிக்கப்பட்டுள்ளதுடன், மேஜர் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க லெப்டினல் ஜெனரலாக பதவி உயர்த்தப்பட்டு, 22 வது இராணுவத்தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். 

அதேவேளை கிழக்கு மாகாண ஆளுநராக முன்னாள் வௌிவிவகார அமைச்சர் ரோஹித பொகொல்லாகம நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

முன்னதாக கிழக்கு மாகாண ஆளுநராக பதவி வகித்த ஒஸ்டின் பெர்ணாந்தோ ஜனாதிபதிதியின் செயலாளராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே ரோஹித பொகொல்லாகம நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a comment