விம்பிள்டன் தொடர் இன்று ஆரம்பம்

41649 0

விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் இன்று ஆரம்பமாகிறது.

இன்று ஆரம்பமாகும் இந்த போட்டித் தொடர் எதிர்வரும் 16ஆம் திகதி வரை நடைபெறும்.

வருடாவருடம் நான்கு வகையான கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற டெனிஸ் போட்டிகளில் விம்பிள்டன் டெனிஸ் போட்டிகளே முதன்மை இடத்தில் உள்ளது.

விம்பிள்டனையொட்டி முன்னணி வீரர், வீராங்கனைகள் லண்டனில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆண்கள் பிரிவில், தற்போதைய நடப்பு சம்பியனான இங்கிலாந்தை சேர்ந்த அன்ரி முரே, ஸ்பெயினை சேர்ந்த ரபெல் நடால், சுவிஸ்சலாந்தை சேர்ந்த ரோஜர் பெடரர் மற்றும் செர்பியாவைச் சேர்ந்த நோவாக் ஜோகோவிச் ஆகியோரில் ஒருவரே சம்பியன் பட்டத்தை வெல்லும் சாத்தியம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a comment