யேர்மனியின் தென்மேற்கு மாநிலத்தின் மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப்போட்டி- 2017

12108 0

தென்மேற்கு மாநில தமிழாலயங்களிடையேயான மாவீரர்வெற்றிக்கிண்ண விளையாட்டுப்போட்டிகள் 01.07.17 அன்று சனிக்கிழமை சார்லாந்து மாநிலத்தின் கொம்பேர்க் நகரத்தில் நடைபெற்றது.பொதுச்சுடர் ஏற்றலுடன் தொடங்கிய இவ்விளையாட்டுப் போட்டிகளில் பொதுச்சுடரினை கொம்பேர்க் நகரசெயற்பாட்டாளர் திரு.உதயமூர்த்தி அவர்கள் ஏற்றி வைக்க யேர்மன் நாட்டுக் கொடியினை விளையாட்டுக்கூட்டமைப்பின் பொறுப்பாளர் திரு.ராஜகுமாரன் ஏற்றி வைக்க தமிழீழதேசியக்கொடியினை சார்லாந்து மாநிலச்செயற்பாட்டாளர்களில் ஒருவரான திரு.பரணி அவர்கள் ஏற்றிவைத்தார். தமிழாலங்களின் கொடியினை கல்விக்கழகத்தின் விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர் திருமதி ஞானச்செல்வி திருபாலசிங்கம் ஏற்றிவைக்க அகவணக்கத்துடன் விளையாட்டுக்கள் ஆரம்பித்தான.

150க்கும் மேற்பட்ட தமிழாலயங்கள் பங்குபற்றிய இப்போட்டிகளில் 1ம் இடத்தை சாபுறுக்கன் தமிழாலயமும் 2ம் இடத்தை லண்டோ தமிழாலயமும் 3ம் இடத்தை நொய்ஸ்ரட்வைன் ஸ்ராச(Neustadt weinstrasse) ஆகிய தமிழாலயங்கள் மாவீரர் வெற்றிக்கிண்ணங்களை பெற்றுக்கொண்டன.

Leave a comment