வடகொரியாவுக்கு இறுதி வாய்ப்பு – தென்கொரியா

630 0

வெளி உலகத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான இறுதி வாய்ப்பு வடகொரியாவுக்கு கிடைத்திருப்பதாக தென்கொரியாவின் ஜனாதிபதி மூன் ஜே தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் முன்னாள்ஜனாதிபதி பராக் ஒபாமாவை சந்தித்தப் பின்னர் அவர் இந்த கருத்தை வெளியிட்டதாக, தென்கொரிய ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

வடகொரியாவின் அணுவாயுத தயாரிப்புகள் அந்த நாட்டின் பொதுமக்களை பாதுகாக்கப் போவதில்லை.

இந்த செயற்பாட்டை முறியடிக்க அமெரிக்கா வடகொரியாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை விதிப்பதுடன், பேச்சுவார்த்தைகளை நடத்துவதையும் ஒரு தெரிவாக முன்கொண்டு செல்ல வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

ஏற்கனவே அவர் இந்த விடயம் குறித்து அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு எடுத்துக்கூறியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment