இலங்கையை முழுமையாக மறுசீரமைக்க வேண்டும் – கிழக்கு மாகாண ஆளுனர்

8807 208

இலங்கை முழுமையாக மறுசீரமைப்பு பெறுவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்ட்டின் பெர்ணாண்டோ இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் ஜனாதிபதியின் செயலாளராக நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், ஆளுனர் அலுவலகத்தில் நடைபெற்ற பிரியாவிடை நிகழ்வில் வைத்து இதனை அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் முழுமையான மறுசீரமைப்பை மேற்கௌளும் நோக்கிலேயே அனைத்து செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Leave a comment