தேர்தல் நடைப்பெறும் வரை விலகி இருக்க ஒன்றிணைந்த எதிர்கட்சி தீர்மானம்

535 0

தேர்தல் நடைப்பெறும் வரை புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் யோசனைகளை முன்வைக்கும் செயற்பாடுகளில் இருந்து விலகி இருக்க, ஒன்றிணைந்த எதிர்கட்சி தீர்மானித்துள்ளது.

மொனராகலையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது, நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் முன்னைய அரசாங்கத்துக்கு வலியுறுத்தல் விடுத்த வெளிநாட்டு அமைப்புகள் தற்போது மௌனம் காத்து வருகின்றனர்.

தேர்தல் நடத்துவது குறித்தும் அவர்கள் பேசுவதில்லை.

எனவே ஒன்றிணைந்த எதிர்கட்சி, தேர்தல் நடைப்பெறும் வரை புதிய அரசியல் அமைப்பு உருவாக்கம் தொடர்பில் உதவிகளை வழங்காது எனவும் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

Leave a comment