மன்னார் மடு அன்னையின் ஆடி மாத திருவிழா (காணொளி)

15309 0

மன்னார் மடு அன்னையின் ஆடி மாத திருவிழா திருப்பலி இன்று காலை 6.15 மணிக்கு தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் ஒப்புக்கொடுக்கப்பட்டது.

மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலர் மேதகு ஆயர் யோசப் கிங்சிலி சுவம் பிள்ளை ஆண்டகை தலைமையில், திருகோணமலை மறைமாவட்ட ஆயர் நோயல் இம்மானுவல், அனுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நோபட் அன்றாடி ஆகியோர் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர்.

மடுத்திருத்தலத்தின் ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு கடந்த 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை மடு ஆலயத்தில் மடு ஆலய பரிபாலகர் அருட்தந்தை எஸ்.எமிலியாணுஸ்பிள்ளை அடிகளார் தலைமையில் பாப்பரசரின் கொடியும் மடு அன்னையின் கொடியும் ஏற்றிவைக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து கடந்த ஒன்பது தினங்கள் மாலையில் திருச்செபமாலையுடன் நவ நாள் திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று காலை 6.15 மணிக்கு திருவிழா திருப்பலி மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலர் மேதகு ஆயர் யோசப் கிங்சிலி சுவம் பிள்ளை ஆண்டகை தலைமையில் கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.

திருவிழா திருப்பலியை தொடர்ந்து திருச் சொரூப பவணியும், அதனைத் தொடர்ந்து ஆசியும் வழங்கப்பட்டது.

திருவிழாவில் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அன்ரனி விக்டர் சோசை, மடு பரிபாலகர் அருட்தந்தை எமிலியானுஸ் பிள்ளை, அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், நீதிபதிகள், திணைக்கள தலைவர்கள் உட்பட மடு திருவிழாவிற்கு நாட்டின் சகல பாகங்களில் இருந்தும் ஏராளமான மக்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://youtu.be/6rbppxdeRHw

Leave a comment