தற்போதைய அரசாங்கத்தை கவிழ்த்தால் அடுத்து? – ஜேவிபி கேள்வி

358 0

தற்போதைய அரசாங்கத்தை 2020ஆம் ஆண்டு கவிழ்ப்பதாயின், அதன் பின்வரும் ஆட்சி தொடர்பில் ஜேவிபி கேள்வி எழுப்பியுள்ளது.

புலத்கொஹூபிடிய பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிழக்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜேவிபியின் பொது செயலாளர் டில்வின் சில்வா இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.

2020ஆம் ஆண்டு தேர்தலில் போது தற்போதைய ஆட்சி கவிழ்க்க வேண்டுமானால், அதன் பின் அமைக்கப்படவேண்டிய ஆட்சி எது? அது தொடர்பில் சிந்திக்கவேண்டும்.
அதனை விடுத்து தற்போதைய ஆட்சியை கவிழ்ப்பதில் பலனில்லை.

அத்துடன், மகிந்த ஆட்சியில் ஏற்பட்ட வெறுப்பின் காரணமாகவே தற்போதைய அரசாங்கம் தேற்றுவிக்கப்பட்டதாக தெரிவித்த டில்வின் சில்வா, 2020இன் பின் வரும் ஆட்சி தொடர்பில் அனைவரும் ஒரு தீர்மானமாக பதிலுக்கு வரவேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

Leave a comment