குப்பை கொட்டுபவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை

451 4

அனுமதியின்றி அரசாங்கத்துக்கு சொந்தமான பகுதிகளில் குப்பைகளை கொட்டுபவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

அந்த அமைச்சால் விடுக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் கடந்த காலங்களில் பொது இடங்களில் சட்டவிரோதமான முறையில் குப்பைகளை கொட்டிய ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment