குடிநீரின்றி அவதியுறும் பிரதேசங்களிற்கு குடிநிரை வழங்குவது தொடர்பில் விசேட செயற்திட்டம் முழங்காவிலில் ஆராய்வு

5210 21
கிளிநொச்சியில் பூநகரிபிரதேச செயலர் பிரவில் உள்ள  வரலாற்று ரீதியாக இதுவரை குடிநீர் இல்லாத பிரதேசங்களான குமிழமுனை, கரியாலை நாகபடுவான் ,இரணைமாதாநகர் செல்லக்குறிஞ்சி ஆகிய  மேலும் சில பிரதேசங்களுக்கு நீர் எவ்வாறு வழங்குவது தொடர்பான கலந்துரையாடல் ஓன்று பாரளுமன்ற உறுப்பினரும் கிளிநொச்சி மாவட்ட ஓருங்கிணப்புக்குழுத் தலைவருமாகிய சிவஞானம் சிறீதரன் தலைமையில் இன்று முழங்காவில் வெங்கடேஸ்வர ஆலய மண்டபத்தில் இன்று இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாலில் குடிநீர் இல்லாத பிரதேசங்களிற்கு எவ்வாறு நீர் வழங்குவது தொடர்பில் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினரால் விளக்கம் அளிக்கப்பட்டது . இதன் போது குடிநீர் இல்லாத பிரதேசங்களில் குடிநீருக்காக ஐந்து மணித்தியாலங்கள் வரிசையில் மக்கள் காத்திருப்பதாகவும் ஆகவே இவர்களுக்கு நீர்த்தொட்டிகளில் நீர் வழங்குவது பொருத்தமற்றது எனவும் குழாய்வழி நீர் விநியோகமே சிறந்தது எனவும் குறிப்பிடப்பட்டது.
குறித்த கலந்துரையாடலில் வடக்கு மாகாணசபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை, பூநகரி பிரதேசசெயலாளர், நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் ,கிராமசேவையாளர்கள் முழங்காவில் கிராம பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள்,ஏனையகிரமாங்களின் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

Leave a comment