வாகன விபத்துக்களில் 2 வயதுடைய இரு குழந்தைகள் உயிரிழப்பு

405 0

இரு வேறு பிரதேசங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 2 வயதுடைய இரு குழந்தைகள் உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கமைய, நேற்று மாலை மடோல்சிம – அமுனுதோவ பிரதேசத்தில் பாரவூர்தி ஒன்று, 2 வயதும் 6 மாதங்களும் உடைய சிறிய குழந்தை ஒன்றுடன் மோதுண்டதில் குழந்தை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாரவூர்தி சாரதி குறித்த குழந்தையின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

தந்தை வருவதனை எதிர் பார்த்து கொண்டிருந்த குழந்தை, தந்தை வருவதனை அறிந்து விரைந்து வந்துள்ளதனை தொடர்ந்து பாரவூர்தி மீது மோதுண்டு உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய குழந்தையின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை ,வத்தேகம – யடவர பிரதேசத்தில் பாரவூர்தி ஒன்றில் இருந்து கிழே வீழ்ந்து 2 வயதுடைய மற்றைய குழந்தை உயிரிழந்துள்ளது.

நேற்று இரவு குறித்த குழந்தை தனது தாய்யுடன் பாரவூர்தி ஒன்றின் பின் புறமாக சென்றுள்ள நிலையில் பாரவூர்தியின் கதவு திறப்பட்டுள்ள நிலையில் கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

குறித்த குழந்தை மாத்தளை – கச்சேரிய வீதியினை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a comment