கூட்டுறவு இயக்கத்தை வரியிலிருந்து விடுவிப்பதற்கு நடவடிக்கை

362 0
கூட்டுறவு இயக்கத்தை வரியிலிருந்து விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
95 ஆவது சர்வதேச கூட்டுறவு நிகழ்வு நேற்று குருணாகலில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்தார்.
மக்களின் நண்பனாக செயற்பட்டுவரும் மக்கள் இயக்கமான கூட்டுறவு இயக்கத்தைப் பலப்படுத்துவது நாட்டின் வறுமையை ஒழித்துக்கட்டும் நிகழ்ச்சித்திட்டத்தின் முக்கிய அம்சமாகும்.
வெளிநாட்டு சொத்துக்களை பலப்படுத்துவதைப் போன்று ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்க கூட்டுறவு இயக்கத்திற்கு சொந்தமான பெரும்பாலான துறைகளை மேம்படுத்தவேண்டும்.
கூட்டுறவு இயக்கத்தில் உள்ள பிரச்சினைகளை தீர்த்து எதிர்காலத்தில் அதனை பலமான இயக்கமாக மாற்றி புதிய நிகழ்ச்சித்திட்டங்களுடன் முன்கொண்டுசெல்வதற்கு அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கூட்டுறவு இயக்கத்தின் 2020 என்ற தொலைநோக்கை வெற்றிபெறச்செய்வதற்கு இந்த துறையில் உள்ள அனைவரும் தமது பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment