கடந்த ஆட்சி காலத்தில் கண்டி சிற்றன்னையின் மனப்பான்மையிலேயே கவனிக்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.கண்டியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் முறையற்ற திட்டங்களால் கண்டி நகரத்தின் போக்குவரத்து முதற்கொண்டு பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது கண்டி நகரை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது.
கண்டியில் நிலக்கீழ் சுரங்கம் ஒன்றை அமைப்பதற்கான வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதனால் கண்டி நகரம் நிலத் தாழ் இறக்கத்திற்கு முகம் கொடுக்க நேரிடும் என பொய்யாக எதிர்ப்புகள் வெளியிடப்படுவதாக லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.

