ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 18 பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பதவி விலகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இராஜாங்க அமைச்சர் டி பீ ஏக்கநாயக்கவை மேற்கோள் காட்டி ஊடகங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளன.
இதற்கமைய எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் அவர்கள் அனைவரும் பதவி விலகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய தேசிய கட்சியுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்படுத்திக் கொண்ட தேசிய அரசாங்கத்திற்கான உடன்படிக்கை எதிர்வரும் செப்டம்பர் மாதம் நிறைவடையவுள்ள நிலையில் அமைச்சுப்பதவிகளில் இருந்து விலகுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறெனினும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் என்ற வகையில் தமக்கு இது தொடர்பில் இதுவரை அறியப்படுத்தப்படவில்லை என அமைச்சர் துமிந்த திசாநாயக்க நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின்போது குறிப்பிட்டார்.

