ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் சார்பாக டெங்கு ஒழிப்பு படையணி-மகிந்த

367 0
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் சார்பாக டெங்கு ஒழிப்பு படையணி ஒன்றை உருவாக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மொனராகலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்தார்.
உள்ளுராட்சிமன்ற தேர்தல் நடத்தப்படாததினால் உள்ளுராட்சிமன்றங்களில் மக்கள் பிரதிநிதிகள் செயற்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், டெங்கு நோய் பரவும் பகுதிகளில் முறையான சுகாரதார நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாத நிலை தோன்றியுள்ளது.
எனவே, மலேரியாவை ஒழிப்பதற்காக என் எம் பெரேரா போன்றவர்கள் முன்னெடுத்த சூரியமல் செயல் திட்டத்தை போன்ற ஒரு வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக மகிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment