சட்டவிரோத கடற்தொழிலில் ஈடுபட்ட எட்டு பேர் கைது

510 0
சட்டவிரோத கடற்தொழிலில் ஈடுபட்ட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் நேற்று திருகோணமலையின்  நோர்வே தீவிற்கு அருகில் சட்டவிரோத கடற்தொழிலில் ஈடுபட்டபோது கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது சட்டவிரோத கடற்தொழிலாளர்கள் பயன்படுத்திய படகு மற்றும் 225 மீற்றர் நீளமான தடை செய்யப்பட்ட வலை என்பன மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையின் உத்தியோகபூர்வ வலையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோன்று கடந்த 30 ஆம் திகதி நோர்வே தீவுப் பகுதியில் சட்டவிரோத கடற்தொழிலில் ஈடுபட்ட 7 பேர் கைதுசெய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment