அரசாங்கம் மேற்கொண்டுள்ள புதிய வரி சீர்த்திருத்தத்தில் வரிக்கு உட்படாத மத மற்றும் சமூக நல நிறுவனங்களிடமும் வரி அறவிடப்படவுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய தேசிய சுதந்திர முன்னணியில் தலைவர் விமல் வீரவங்ச இதனை தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, பல்வேறு வரிகளுக்கு முகம் கொடுத்துள்ள மக்கள் மேலும் வரி முறைகளுக்கு முகம்கொடுக்க நேர்ந்துள்ளதாக அவர் இதன் போது குறிப்பிட்டார்.

