பாகிஸ்தான் சிறைகளில் 546 இந்தியர்கள் – இந்தியாவிடம் பட்டியல் அளிப்பு

220 0

பாகிஸ்தானில் உள்ள சிறைகளில் 546 இந்தியர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த 546 இந்தியர்கள் பட்டியலை பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் கவுதம் பம்பாவாலேயிடம் வழங்கப்பட்டது.

பாகிஸ்தானில் உள்ள சிறைகளில் 546 இந்தியர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். 2008-ம் ஆண்டு, மே மாதம் 21-ந் தேதி இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே கையெழுத்தான தூதரக அணுகல் ஒப்பந்தத்தின் கீழ், இந்த 546 இந்தியர்கள் பட்டியலை பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் கவுதம் பம்பாவாலேயிடம் வழங்கப்பட்டது. 546 பேரில் 494 பேர் மீனவர்கள். 52 பேர் மற்ற இந்திய குடிமக்கள் ஆவர்.

இதே போன்று இந்திய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் பிரஜைகளின் பட்டியலை இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதரிடம் மத்திய அரசு வழங்கும் என தகவல்கள் கூறுகின்றன.

இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகம் கூறுகையில், “இரு நாடுகளும் தூதரக அணுகல் ஒப்பந்தத்தின்படி, ஒவ்வொரு ஆண்டிலும் ஜனவரி 1-ந் தேதியும், ஜூலை 1-ந் தேதியும், பரஸ்பரம் எதிர்தரப்பு கைதிகளின் பட்டியலை வழங்க வேண்டும் என்பதைப் பின்பற்றி இந்திய தூதரிடம் பாகிஸ்தானில் உள்ள இந்திய கைதிகளின் பட்டியல் தரப்பட்டுள்ளது” என்று தெரிவித்தது.

Leave a comment