அமெரிக்காவில் உள்ள அணுமின் நிலையங்களின் கணினிகள் ஹேக் செய்யப்பட்டதா?: எப்.பி.ஐ

221 0

அமெரிக்காவில் உள்ள அணுமின் நிலையங்களின் கணினிகள் மர்மநபர்களால் ஹேக் செய்யப்பட்டதாக வந்திருந்த தகவலை எப்.பி.ஐ மறுத்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள அணுமின் நிலையங்களின் கணினிகளை மர்மநபர்கள் கொண்ட குழு ஹேக் செய்திருப்பதாகவும், இதனால், அணுமின் நிலையங்களின் பாதுகாப்புக்கு ஆபத்து நிலவுவதாகவும் கடந்த புதன் கிழமை தகவல்கள் வெளியானது. இந்த தகவல் பாதுகாப்பு நிபுணர்களையும், பொதுமக்களையும் பெரும் பரபரப்புக்கு உள்ளாக்கியது.

இந்நிலையில், இந்த தகவலை அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை மற்றும் புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ ஆகியன மறுத்துள்ளன. செயல்பாட்டில் உள்ள சுமார் 99 அணுமின் நிலையங்களின் பாதுகாப்பு அம்சத்தில் மர்மநபர்கள் ஊடுருவ முயற்சித்ததாக வெளியான தகவல் பொய் எனவும், யாரும் ஊடுருவ முடியாத அளவுக்கு பாதுகாப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், புதன் கிழமை அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு குறித்து வெளியான தகவல் குறித்த கேள்விகளுக்கு அதிகாரிகள் பதிலளிக்கவில்லை. பாதுகாப்பு துறையின் மாறுபட்ட அறிக்கைகளால் மக்கள் பெரிதும் குழப்பமடைந்துள்ளனர்.

Leave a comment