உதயங்கன வீரதுங்கவின் 2 கடவுச் சீட்டுகள் ரத்து

345 0

ரஷ்யாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்கன வீரதுங்கவுக்கு இலங்கையின் குடிவரவு குடியகல்வு திணைக்களம் விநியோகித்த ராஜதந்திர கடவுச் சீட்டு மற்றும் பிறிதொரு கடவுச் சீட்டு என்பனவற்றை கோட்டை நீதிமன்ற நீதிவான் ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். 

குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, கோட்டை நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன இந்த தடையுத்தரவை பிறப்பித்ததாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

2009 ஆம் ஆண்டு உக்ரேனிலிருந்து மிக் போர் விமானங்களை கொள்வனவு செய்த போது அதில் உடந்தையாக செயற்பட்டு முறையற்ற வகையில் நிதி மோசடி செய்தமை தொடர்பில் நிதி மோசடி பிரிவில் அவருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment