அமெரிக்க டென்னிஸ் நட்சத்திரமான வீனஸ் வில்லியம்ஸின் கார் விபத்துக்குள்ளானதில், 78 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார். ஆனால், அதுதொடர்பாக வீனஸ் வில்லியம்ஸ் மீது எந்தக் குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை.
”கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டம் வென்ற நபர் சம்பந்தப்பட்ட ஓர் அபாயகரமான விபத்து வழக்கை விசாரணை செய்துவருவதாக,”பாம் பீச் கார்டன்ஸ் (Palm Beach Gardens) காவல்துறையின் செய்தி தொடர்பாளர் பிபிசியிடம் உறுதிப்படுத்தினர்.
ஜூன் 9-ஆம் தேதி நடத்த விபத்துக்குப் பின்னர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அந்த நபர் இரண்டு வாரங்களுக்கு பின்னர் இறந்துவிட்டார் என்று செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
வீனஸ் வில்லியம்ஸ் தவறு இழைத்ததாக காவல்துறை அதிகாரிகள் நம்புவதாக கூறப்படுகிறது. ஆனால் அது ஒரு விபத்து என்று அவரது வழக்கறிஞர்கள் கூறுகின்றனர். எனினும், இதுவரை அவர் இந்த வழக்கில் தொடர்புபடுத்தபடவில்லை என்றும் அவர் மீது வழக்கு பதியப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
சம்பவம் நடந்தபோது, இறந்த நபர் ஜெரோம் பார்ஸ்னின் மனைவி காரை ஒட்டிவந்தார். அந்த கார் ஒரு சாலை சந்திப்பில் இணையும் சந்திப்பில் மோதல் நடந்தது.
அந்த தம்பதியின் கார் செல்லும் பாதையில் வில்லியம்ஸின் கார் தீடிரென வந்தது என்றும் சாலை நெரிசலில்அப்போது சாலையை குறிப்பிட்ட நேரத்தில் சரிப்படுத்த முடியாமல் போனது என்று, சம்பவத்தை நேரில் பார்த்தவர்களின் அறிக்கையை பதிவு செய்துள்ள காவல்துறையின் அறிக்கையை பெற்றுள்ள அமெரிக்க செய்தி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்ட பார்ஸ்னின் மனைவி உயிர் பிழைத்தார்.
வீனஸ் வில்லியம்ஸ்படத்தின் காப்புரிமைGETTY IMAGESவண்டியை ஓட்டிவந்தவர் சரியான பாதையில்தான் வந்தார். தவறு வில்லியம்ஸ் பக்கம் உள்ளது,” என அந்த அறிக்கை கூறுகின்றது. மருந்துகள், மது அல்லது மொபைல் ஃபோன் கவனச்சிதறல்கள் போன்ற வேறு எந்த காரணிகளும் இந்த விபத்துக்கு காரணம் இல்லை என்றும் அந்த அறிக்கை கூறுகின்றது.
ஏழு முறை கிராண்ட் ஸ்லாம் சாம்பியன் பட்டம் வென்ற 37 வயதான விளையாட்டு வீராங்கனை வில்லியம்ஸ் அந்த தம்பதியின் காரை பார்க்கவில்லை மற்றும் வண்டியை ஓட்டிவந்தவர் மிக மெதுவமாக ஓட்டிவந்தார்.
வில்லியம்ஸின் வழக்கறிஞர் மால்கம் கன்னிங்ஹாம் சி.என். என்னுக்கு அளித்த அறிக்கையில்: “வில்லியம்ஸ் பச்சை நிற விளக்கு தெரிந்தபோது குறுக்கிட்டார். வில்லியம்ஸின் கார் பார்ஸனின் காரில் மோதியபோது அவர் வெறும் ஒரு மணிநேரத்திற்கு 5 மைல் வேகத்தில்தான் சென்றுகொண்டிருந்தார்,” என்று கூறினார்.
“இந்த சம்பவத்தில் வில்லியம்ஸுக்கு தொடர்பு இருப்பதாக அதிகாரிகள் எந்த குறிப்புகள் அல்லது போக்குவரத்து மீறல் தகவல் எதையும் வெளியிடவில்லை. இது ஒரு துரதிர்ஷ்டவசமான விபத்து. வீனஸ் இதற்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.” என்றார்.
அடுத்த வாரம், லண்டனில் தனது 20 ஆவது விம்பிள்டன் போட்டியில், வில்லியம்ஸ் விளையாடவுள்ளார்.
வில்லியம்ஸ் மற்றும் அவரது சகோதரி செரீனா இரண்டு தசாப்தங்களாக மகளிர் டென்னிஸ் விளையாட்டில் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர்.

