சுகாதாரத்துறை என்பது உயிரை பறிக்கும் துறையாக உள்ளது: மு.க.ஸ்டாலின்

536 0

சுகாதாரத்துறை என்பது உயிரை பறிக்கும் துறையாக உள்ளது என்று தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் நூலகங்களுக்கு புத்தகங்கள் வழங்குதல், மாணவ-மாணவிகளுக்கு ஜாமெட்ரி பாக்ஸ், வாட்டர் பாட்டில் வழங்கியதுடன் மழைநீர் கால்வாய் மற்றும் மயானங்களை ஆய்வு செய்தார்.

அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

இந்த ஆட்சியில் கைத்தறி துறை மட்டுமல்ல அது பாலாக இருந்தாலும், அரிசியாக இருந்தாலும், குதிரைபேரம் பேச்ககூடிய விசயமாக இருந்தாலும், அதே போல் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற போதை பொருட்களாக இருந்தாலும் சரி எதைப்பற்றி கேட்டாலும் தகவல் வந்தால் நடவடிக்கை எடுப்பதாக சொல்லிக் கொண்டிருக்கிறார்களே தவிர முறையான நட வடிக்கை இந்த ஆட்சியில் எடுக்கப்போவதில்லை.

அதைப்பற்றி இந்த ஆட்சியாளர்கள் கொஞ்சம் கூட கவலைப்பட போவதில்லை. இந்த ஆட்சி குதிரை பேரத்தால் நடந்து கொண்டிருக்கிறது.

ஆட்சியை தக்க வைத்துக் கொண்டு, கொள்ளையடிக்க ஊழல் புரிவதற்கு எப்படி ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் நடந்த போது ரூ.89 கோடிக்கு பணப்பட்டுவாடாவுக்கான ஆவணம் வருமான வரித்துறையினரிடம் சிக்கியது. அதே போல் குட்கா போதை பொருள் விற்பதற்கு லஞ்சமாக ரூ. 40 கோடி கொடுக்கப்பட்டதற்கான ஆவணமும் வருமான வரித்துறையிடம் சிக்கி உள்ளது.

இவற்றை ஒப்பிட்டு பார்க்கும் போது சம்பந்தப்பட்ட சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அதே போல் உயர் போலீஸ் அதிகாரிகள் இவர்கள் மீது உடனே இந்த அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். நடவடிக்கை எடுத்து பதவியில் இருந்து நீக்குமாறு அறிக்கை மூலம் கேட்டுக்கொண்டிருந்தேன். சட்டசபையிலும் பேசி பதிவு செய்துள்ளேன்.

 

கே:- சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இதை சட்டப்படி சந்திப்பேன் என்ற கூறி இருக்கிறாரே?

ப:- ஆர்.கே.நகரில் ரூ. 89 கோடிக்கு பணம் பட்டுவாடா நடந்ததற்கான ஆவணம் வருமான வரித்துறையிடம் சிக்கியதே, அதுக்கு இவரது பதில் என்ன? இதில் அவர் நீதிமன்றத்தைநாடினாரா? வழக்கு தொடர்ந்துள்ளாரா?

அதே போல் பான்பராக் குட்காவுக்கு லஞ்சம் என்ற செய்தி 1 வாரமாக வந்து கொண்டிருக்கிறதே.

இதில் விஜயபாஸ்கரின் மேல் நடவடிக்கை என்ன?, வருமான வரித்துறை மீது வழக்கு தொடர்ந்துள்ளாரா? இது வரை இல்லையே?

எப்போது செய்தி வந்ததோ அப்போதே வழக்கு போட்டிருக்க வேண்டும். சட்ட ரீதியாக சந்தித்திருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்போம். இது வரை இல்லையே?

சுகாதாரத்துறை என்பது உயிரைகாக்கும துறையாகும். ஆனால் இவரது செயல்பாடு உயிரை பறிக்கும் துறையாக உள்ளது.இது உள்ளபடியே வேதனைதரக்கூடியதாகும்.

இதே போல் எம்.எல். ஏ.க்களுக்கு குதிரை பேரம் நடந்ததாக பத்திரிகையில் செய்தி வந்ததும் ஆளும் கட்சி எம்.எல்.ஏ. சரவணன், கனகராஜ் 2 பேர் பேட்டி தந்தனர்.

சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.இது வரை நடவடிக்கை எடுக்கப்பட்டதா? இல்லையே. இவ்வாறுஅவர் கூறினார்.

Leave a comment