இரட்டைக் குடியுரிமை கொண்டுள்ளவர்களின் பெயர் விவரங்கள் அடுத்த மாத இறுதியில வெளியிடப்படும் என்றும் தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோகண ஹெட்டியாராச்சி நேற்று நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைக் குறிப்பிட்டார்.
இது தொடர்பான தகவல்களை வழங்க வேண்டும் என்று தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்திடம் கோரப்பட்டுள்ளது. 3 வாரங்களில் இந்தத் தகவல்களை வழங்க முடியும் என்று குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் எமக்கு தெரியப்படுத்தியுள்ளது.
19ஆம் திருத்தச் சட்டத்தின் கீழ் இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாகப் பதவி வகிக்க முடியாது.உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தாமதிக்கப்பட்டால் அதற்கான பொறுப்பை அரசே ஏற்க வேண்டும். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எப்போது நடத்தப்படும் என்பது தொடர்பான தீர்மானத்தை நாடாளுமன்றமே எட்ட வேண்டும். – என்றார்.

