கட்டார் நெருக்கடி – இலங்கைக்கு கிடைக்க பெறும் அந்நிய செலாவணி குறைவடைந்து

271 0

கட்டாரில் நிலவும் ராஜதந்திர நெருக்கடி காரணமாக இலங்கைக்கு கிடைக்க பெறும் அந்நிய செலாவணி குறைவடைந்துள்ளதாக மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அந்நிய செலாவணி கிடைக்கபெறுகின்றமை குறைவடைந்துள்ளதன் காரணமாக நாட்டில் பொருளாதார பிரச்சினை தலைதூக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாம் கட்ட கடன்தொகை இன்னும் கிடைக்க பெறவில்லை.

சீனாவிடம் இருந்து கிடைக்க பெறும் என கூறப்பட்ட நிதியுதவி இன்னும் கிடைக்க பெறவில்லை.

கட்டார் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளிடம் இருந்து கிடைக்க பெறும் அந்நிய செலாவணி வெகுவாக குறைவடைந்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

எனவே இது தொடர்பாக ஆழமாக சிந்தித்து இதிலி;ருந்து மீள்வதற்கான உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும் என மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

Leave a comment