மட்டக்குளி, ஜுபிலி மாவத்தையில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு நபரொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர், கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையின், களனி நுழைவாயில் அருகில்வைத்து சந்தேக நபர், நேற்று இரவு கைதுசெய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
முச்சக்கரவண்டியில் பயணித்த நபர், உந்துருளியில் வந்த இருவரால் கடந்த 5ஆம் திகதி சுட்டுக்கொல்லப்பட்டதுடன் உந்துருளியை செலுத்திய சந்தேக நபரே தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடம் மேற்கொண்ட விசாரணைகளையடுத்து, கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட டி-56 ரக துப்பாக்கி மற்றும் 8 ரவைகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

