பொது இடத்தில் குப்பை கொட்டிய 14 பேருக்கு வழக்கு பதிவு

402 0

ஹட்டன் – டிக்கோயா நகரசபைக்குற்பட்ட பகுதிகளில் பொது இடங்கைளில் குப்பைகளை கொட்டிய 14 பேருக்கு எதிராக வழக்குபதிவு செய்யப்பட்டுள்தாகவும் தொடர்ந்தும் குப்பைகளை பொது இடங்களில் கொட்டுவோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொது சுகாதார பரிசோதகர் ராமையா பாலகிருஸ்னன் தெரிவித்தார். 

கடந்த சில மாதங்களாக குப்பைகளை கொட்டுவதற்கு இடமில்லாத நிலையையில் ஹட்டன் டிக்கோயா நகரசபை பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் தேங்கிக் கிடந்தது எனினும் கடந்த 23 ம் திகதிக்கு பின் குப்பைகள் முழுமையாக அகற்றப்பட்டுள்ளது.

எனினும், குப்பைகளை உக்கும் குப்பை உக்காத குப்பை என வகைப்படுத்தியே குப்பைகளை நகரசபை பெற்றுவருகின்றது இதற்கு பொதுமக்கள் 80 வீதமானோர் பூரண ஒத்துழைப்பை நல்கி வருகின்றனர்.

உக்கும் குப்பைகளை திங்கள், செவ்வாய், புதன்கிழமைகளில் சேகரிக்கப்படுகின்றது. அவ்வாறு சேகரிக்கப்படும் குப்பைகள் அம்பகமுவ பிரதேச சபை, நுவரெலியா பிரதேச சபைக்குற்பட்ட பகுதிகளில் பசளை தயாரிப்பிற்காக அனுப்பி வைக்கப்படுகின்றது.

அதேபோல உக்காத குப்பைகளை சனிக்கிழமைகளில் சேகரிக்கின்றோம் அவ்வாறு சேகரிக்கப்படும். இரும்பு, கண்ணாடி, காட்போட் போன்றவற்றை சேகரித்து விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

ஹட்டன் – டிக்கோயா நகரசபைக்குற்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் குப்பைகளை கொட்டுவது குறைவடைந்துள்ள போதிலும் உக்கும் குப்பை உக்காத குப்பைகள் என தொடர்ந்து வகைப்படுத்தி தருவார்களாயின் எமது பணிகளை தொடர்ந்து முன்னெடுக்க இலகுமாக அமையும் என்று தெரிவித்தார்.

Leave a comment