இலங்கையில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு

325 0

இலங்கையில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் கடந்த ஆண்டில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிராக 8 ஆயிரத்து 288 குற்றங்கள் பதிவாகியிருந்த நிலையில், 2016ஆம் ஆண்டில் அந்தக் குற்றங்கள் 9 ஆயிரத்து 42 ஆக அதிகரித்துள்ளது.

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் அறிக்கையொன்றில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, 2015 ஆம் ஆண்டில் 11 லட்சத்து 29 ஆயிரத்து 555 குற்றங்கள் நாட்டில் பதிவாகியுள்ள நிலையில், 2016 ஆம் ஆண்டில் 11 லட்சத்து 55 ஆயிரத்து 215 குற்றங்களாக அவை அதிகரித்துள்ளன.

2016 ஆம் ஆண்டு பாரிய குற்றங்கள் என்ற அடிப்படையில் 40 ஆயிரத்து 188 குற்றங்கள் பதிவாகின.

இது 2015ஆம் ஆண்டில் 36,937 பாரிய குற்றங்களாக பதிவாகியிருந்தன.

அதேபோன்று சிறு குற்றங்களும் 43ஆயிரத்து 570 லிருந்து 45ஆயிரத்து 579ஆக உயர்ந்திருந்தது.

மேலும், போதைப்பொருள் தொடர்பில் 2015 இல் 89 ஆயிரத்து 996 குற்றங்கள் பதிவாகியிருந்த நிலையில், 2016 இல் 88 ஆயிரத்து 352 குற்றங்களும் பதிவாகி சிறியளவிலான வீழ்ச்சியைக் காட்டியுள்ளது.

அத்துடன், மதுபானங்கள் தொடர்பிலான குற்றங்கள் 2015 ஆம் ஆண்டு ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 944 ஆக பதிவான நிலையில், 2016 இல் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 105 ஆக அதிகரித்திருந்தன.

இதேவேளை, 2015 இல் 36 ஆயிரத்து 918 ஆக பதிவாகியிருந்த விபத்துக்கள் 2016 இல் 39 ஆயிரத்து 56 ஆக உயர்வடைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment