முன்னாள் போராளிகள் புற்றுநோயால் மரணம் பெரிதுபடுத்த தேவையில்லை-ருவன் விஜேவர்தன

324 0

ruwan-wijewardenaஇராணுவத் தடுப்பு முகாம்களில் இருந்து வெளியேறிய 103 முன்னாள் போராளிகள் புற்றுநோயால் உயிரிழந்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரனின் தெரிவித்த குற்றச்சாட்டுக்களை அரசாங்கம் பொருட்படுத்தாது என ஸ்ரீலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

புனர்வாழ்வின் பின்னர் விடுதலையான முன்னாள் விடுதலைப்புலி போராளிகள் 103 பேர் மர்மமான முறையில் உயிரிழந்ததாக கடந்த 7ஆம் திகதி சிறிலங்கா நாடாளுமன்றில் தெரிவித்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன், அவர்கள் தொடர்பான விபரங்களையும் வெளியிடவுள்ளதாக கூறியுள்ள நிலையிலேயே பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா இராணுவத்தினரால் புனர்வாழ்வு அழிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட நிலையில் புற்றுநோய் உட்பட மர்மமான முறையில் உயிரிழந்த முன்னாள் போராளிகள் 103 பேரின் பெயர் விபரங்களை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்திருந்தார்.

கடந்த மாதம் 7ஆம் திகதி நாடாளுன்றில் இந்த தகவலை வெளியிட்ட அவர், மரணங்கள் தொடர்பில் முழுமையான விசாரணையொன்றை முன்னெடுத்து உண்மையை வெளிக்கொண்டுவர வேண்டுமெனவும்  அவர் அரசாங்கத்தை வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில். ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், ஸ்ரீதரனின் குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விடயத்தை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் உரையாற்றுகையில் “நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் போன்றவர்களின் கருத்துக்கள் தொடர்பில் நாங்கள் கணக்கெடுப்பது இல்லை. எனினும் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு பலவந்தமாக புற்றுநோய் ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு ஒன்று காணப்படுகிறது. இதுவொரு மிகப்பெரிய பொய்யான குற்றச்சாட்டு.

புனர்வாழ்வு நடவடிக்கையானது சர்வதேச தரத்திற்கு அமைய வெளிப்படையாகவே மேற்கொள்ளப்படுகின்றது. புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேறுபவர்களுக்கு என்ன நடக்கும் என்பது தொடர்பில் நாம் அனைவரும் அறிவோம்.

எனினும் அவ்வாறான நிலை எமது தரப்பில்  நடக்கவில்லை. புனர்வாழ்வு அளிக்கப்பப்பட்டவர்களுக்கு இராணுத் தரப்பில் எவ்விதமான பிரச்சினைகளும் இருக்கவில்லை. அது தொடர்பில் விடையளிக்க வேண்டி தேவைக்கூட இல்லை. ஸ்ரீரதன் பேரினவாத சிந்தனையில் செயற்டுபடுகின்றார் என கூறினார்.

2009ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி முடிவுக்கு கொண்டுவரப்பட்ட போரின் இறுதிக் கட்டத்தில் விடுதலைப் புலிகள் இயக்க போராளிகள் கைதுசெய்யப்பட்டும், சரணடைந்த நிலையிலும் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

அப்போதைய அரசாங்கத்தின் புள்ளிவிபரங்களுக்கு அமைய 12 ஆயிரம் விடுதலைப் புலி உறுப்பினர்கள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.