மகிந்தவின் முன்னாள் சாரதியின் விளக்கமறியல் நீடிப்பு

324 0

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் சாரதியாக கடமையாற்றிய திஸ்ஸ விமலசேனவின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி அவர் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்று கொழும்பு மேலதிக நீதவான் சானிமா விஜேபண்டார முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நவகமுவ பிரதேசத்தில் காணி மீளமைப்பு ஆணைக்குழுவிற்கு சொந்தமான காணியொன்றில் கல் உடைக்கும் தளம் ஒன்றை நடாத்தி சென்றமை தொடர்பில் அவர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

அந்த குற்றச்சாட்டுக்கள் அடிப்படையில் அவர் காவற்துறை நிதி மோசடி தவிர்ப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment