சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்ட மூன்றாம் தவணை தொகை அடுத்தமாதம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய வங்கியின் அதிகாரிகள் இதனைத் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், 1.5 பில்லியன் டொலர்கள் கடன்தொகையாக வழங்கப்படவுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் சில கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததன் காரணமாக இந்த கடன் தொகை வழங்க தாமதமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

