இலங்கையின் வெளியுறவுக் கொள்கை தொடர்பான மாநாடு ஒன்று லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவகத்தில் இடம்பெறவுள்ளது.
இந்த மாநாடு நாளையும் நாளை மறுதினமும் இடம்பெறவுள்ளது.
வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் தலைமையில் இந்த மாநாடு இடம்பெறவுள்ளது.
இந்த மாநாட்டின் போது இலங்கையின் வெளியுறவுக் கொள்கை அடிப்படையிலான தற்போதைய வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் ஆராயப்படவுள்ளது.
இதுதவிர தேசிய பாதுகாப்பு, மறுசீரமைப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநாட்டில் சீனா, அவுஸ்ரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் வளவாளர்கள் விரிவுரையாற்றவுள்ளனர்.
அத்துடன், ஐக்கிய நாடுகளின் செயற்பாட்டாளர் ராதிகா குமாரசுவாமியும் மாநாட்டில் உரையாற்றவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

