மலிங்கவுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை

343 0

இலங்கை அணி வீரர் லசித் மலிங்கவால் கூறப்பட்டதாக தெரிவிக்கப்படும் கருத்துத் தொடர்பில் ஒழுக்காற்று விசாரணைகளை முன்னெடுக்க மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இன்று கூடிய இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிறைவேற்றுக் குழுவால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மற்றும் ஒப்பந்தத்தை மீறும் வகையில் ஊடகங்களிடம் சர்ச்சைக்குரிய கருத்தை வௌியிட்டமை தொடர்பிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்னதாகவும் இரு சந்தர்ப்பங்களில் மலிங்க இதுபோன்று செயற்பட்டுள்ளதாக, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Leave a comment