நல்லாட்சி அரசாங்கம் ஒரு உணர்வில்லாத அரசாங்கம் – விமல் வீரவன்ச

216 0

நல்லாட்சி அரசாங்கம் ஒரு உணர்வில்லாத அரசாங்கம் அந்த அரசாங்கத்தின் அரசியல் ரீதியிலான உணர்வற்ற செயற்பாடுகள் குறித்து நாம் அறிந்துகொள்ள வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளதென பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

தற்போதை அரசாங்கம் உணர்வுகள் அற்ற அரசாங்கமாகும். எனவ நாட்டின் தேசிய பாதுகாப்பினை கருத்திற் கொள்ளமால் ஒத்திசைவு பட்டியலை நீக்கி சமஷ்டிக்கு வழி சமைக்கின்றது.

கடந்த 2015 ஆம் ஆண்டில் இந்த உணர்வற்ற அரசாங்கம் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்ட்ட அறிக்கைக்கு இணை அனுசரணை வழங்கியது.

அந்த அறிக்கையில் யுத்தகாலத்தில் இலங்கை இராணுவம் மனித உரிமை மீறல்களை செய்தது, காணாமல் போனோர் அலுவலகம் வேண்டும் போன்ற விடயங்களே குறிப்பிடப்பட்டுள்ளன.

பத்தரமுல்லை அபேகம வளாகத்தில் நேற்று இடம்பபெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Leave a comment