ஒற்றுமையே எமது சமூகத்துக்கான பாதுகாப்பு – அமைச்சர் ஏ. ஹலீம்

212 0

எமது சமூகத்தின் பாதுகாப்புக்கும் இருப்புக்கும் உத்தரவாதமாக அமைவது ஒற்றுமையே எனவும், இந்த விடயத்தில் முஸ்லிம் மக்களிடத்தில் நிறைய நீண்ட பொறுப்புள்ளது எனவும் முஸ்லிம் சமயம், கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ ஹலீம் தனது பெருநாள் வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார்.

ஏனைய மாதங்களை விட சிறந்த மாதம் நோன்பு மாதம் ஆகும். முஸ்லிம் மக்கள் மத்தியில் வலுவான ஆன்மீக எழுச்சியைக் கொண்டதாக மிளிர்கின்றது. ஏழை எளிய மக்களது வறிய வாழ்கையை மட்டுமல்லாது, பத்ர் தரும் படிப்பினைகள், ஏழை வரி , இறை திருப்தியைத் தரும் உயரிய நல்ல வணக்க வழிபாடுகள் உடல் ஆரோக்கியம் , முஸ்லிம்களுடைய வெற்றிகள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களுக்கும் பொருந்திய சிறந்த மாதமாக இது விளங்குகின்றது.

இத்தகைய புண்ணியமிகு ரமழானின் சிறப்பமிக்க பயிற்சிகளையும் நன்மைகளையும் அனுபவவித்துவிட்டு புனித நோன்பு பெருநாளை மன மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மக்கள் அல்லாஹ்வின் வரம்புகளுக்கு உட்பட்டு நெருக்கமான உறவை தொடர்ந்து வைத்திருத்தல் அவசியமாகும். நாம் எப்போதும் அல்லாஹ் வின் வரம்புகளை மீறிவிடாமல் இருப்போமாயின் எல்லாவகையிலும் எம்மை அல்லாஹ் பாதுகாப்பவனாக இருப்பான்.

அதே போன்று எல்லாவற்றுக்கும் மேலாக எம்மிடையே காணப்படும் ஒற்றுமையின்மையே எமது வரலாற்றுத் தோல்விகளுக்கு காரணமாக அமைந்துள்ளது. எனவே, எமது சமூகத்தின் பாதுகாப்புக்கும் இருப்புக்கும் உத்தரவாதமாக அமைவது ஒற்றுமையாகும். இந்த விடயத்தில் முஸ்லிம் மக்களிடத்தில் நிறைய நீண்ட பொறுப்பு உள்ளது. நாங்கள் பல்வேறு ரீதியாக பிரிந்து நிற்கின்றோம். நாங்கள் இவைகளை எல்லாம் மறந்து விட்டு ஐக்கியத்தை சாத்தியப்படுத்தும் உறுதியான பலமான பணிகளை அக்கறையுடன் மேற்கொள்ள வேண்டும் என்று இந்த நன்நாளில் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

இந்தப் பெருநாளைக் கொண்டாடும் அனைத்து இலங்கை முஸ்லிம் மக்களும் அதேபோல் எமது நாட்டிலிலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்று தொழில் புரியும் எமது தாயக உறவுகளுக்கும் எனது இனிய நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

முஸ்லிம்களின் கண்ணியமிக்க ரமழான் மாதத்தைச் சிறப்பித்து விட்டு நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் எமது நாட்டு மக்களுக்கு எனது உள்ளம் கனிந்த நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன் என முஸ்லிம் சமயம், கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ ஹலீம் தனது பெருநாள் வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார்.

Leave a comment